யாழ்ப்பாணத்தில் கோர விபத்து - தமிழ் இளைஞன் ஸ்தலத்தில் பலி

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து - தமிழ் இளைஞன் ஸ்தலத்தில் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஊர்காவற்துறையில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளது. வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிள், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரி எதிரே வந்த ஜே.சி.பி வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து - தமிழ் இளைஞன் ஸ்தலத்தில் பலி | Jaffna Accident Police Officer Died Yesterday

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்GalleryGallery