யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த உயர்தர பாடசாலை மாணவி!
யாழ்ப்பாண பகுதியொன்றில் டிப்பர் வாகனம் மோதியதில் உயர்தரப் பிரிவு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்தில் யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவியே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுகொண்டு இருந்தவேளை ஆடியபாதம் வீதியில் பின்பக்கமாக வந்த டிப்பர் குறித்த மாணவி மீது மோதியுள்ளது.
குறித்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் பின்புற சில்லானது மாணவியின் மீது ஏறியது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கு அவர் உயிரிழந்தார்.
மாணவியின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.