யாழில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்

யாழில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்

யாழ்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதன் போது அராலி கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த லோகேநாதிரம் கஜேந்திரன் (வயது 29) என்ற இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சற்று முன் யாழில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம் | Young Man Injured Accident Took Place In Jaffna

இன்றிரவு ஓட்டுமடம் பக்கத்தில் இருந்து வட்டுக்கோட்டை பக்கமாக வந்த ஹையேஸ் ரக வாகனம் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட இளைஞன் மீது மோதியது.

இதன்போது குறித்த இளைஞனின் தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.