யாழில் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட தமிழர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட தமிழர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அராலி மத்தி, வட்டுக்கோட்டை, கணவத்தை பகுதியைச் சேர்ந்த 65 வயதான நடராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட தமிழர் பரிதாபமாக உயிரிழப்பு! | Jaffna Vaddukoddai Motorcycle Accident Old Man Die

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

04-09-2024 ஆம் திகதி காலை வட்டுக்கோட்டை சந்தியில் இருந்து சித்தங்கேணி செல்கிற பக்கமாக அண்ணளவாக 150 மீற்றர்கள் தூரத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குறித்த முதியவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

யாழில் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட தமிழர் பரிதாபமாக உயிரிழப்பு! | Jaffna Vaddukoddai Motorcycle Accident Old Man Dieஇதனையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.