
காவல்துறையினரின் வேடத்தில் இடம்பெற்ற கடத்தல்: இருவர் கைது
காவல்துறை உத்தியோகத்தர்கள் என்று கூறி ஒருவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரை செவனகல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 29 ஆம் திகதி 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை காவல்துறை உத்தியோகத்தர்கள் என்று கூறிக்கொண்டு காரில் வந்த சிலர் கடத்திச் சென்றனர்.
சம்பவம் தொடர்பில் செவனகல காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் இருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், பணத்தகராறு காரணமாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.