சாதாரண தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதன் படி, இரண்டாம் கட்ட மதிப்பீடு இன்று (28) முதல் 10 நாட்களுக்கு நடைபெறும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், சாதாரண தர பரீட்சையின் 80% விடைத்தாள்கள் தற்போது சரிபார்த்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த மே மாதம் தொடங்கி மே 15 ஆம் திகதியே முடிவடைந்த சாதாரண தர பரீட்சையில் 527 பரீட்சை நிலையங்களில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றி இருந்தனர்.

இதேவேளை, க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.