வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

போதியளவு வெளிநாட்டுக் கையிருப்பு இல்லாததால் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது அடுத்த வருடம் வரை தாமதமாகும் என கூறப்படுவது பிழை,  அடுத்த ஆண்டு அல்ல இந்த ஆண்டு இதனைக் கொண்டுவர முடியும் என நம்புகின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய(Ranjith siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எங்கள் பயணப்பாதையை சர்தேச நாணய நிதியத்திற்கு வழங்கினோம். உலகமே சந்தை திறக்கும் வரை காத்திருக்கின்றது. கதவுகளை மூடிக்கொண்டு செல்ல முடியாது.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு | Vehicle Import Sri Lanka

ஏறக்குறைய 2000 பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் எங்களின் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறைக்கு விடை கண்டோம்.

பல்வேறு நபர்களுடன் கலந்தாலோசித்து நாட்டின் தேவைக்கேற்ப பல்வேறு நேரங்களில் அவை திறக்கப்பட்டன. இப்போது எங்களிடம் வாகனங்கள் மட்டுமே உள்ளன.

தேவைக்கு ஏற்ப அதையும் திறந்து வைத்தோம். தேவைக்கு ஏற்ப அம்புலன்ஸ்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் தேவைக்கேற்ப 1000 வாகனங்கள் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டது. வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நாட்டில் பொருத்தப்பட்ட வாகனங்கள் உள்ளன.

இப்போது நாட்டின் தேவைக்கேற்ப கதவுகளைத் திறக்க முயற்சிக்கின்றோம்.  இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து இறக்குமதித் தடைகளைக் குறைக்க முடியும் என நம்புகின்றோம்.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு | Vehicle Import Sri Lanka

இரண்டாவது சரக்கு போக்குவரத்து மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற பொதுமக்களின் போக்குவரத்து தேவைகள் குறித்துக் கவனம் செலுத்தப்படும்.

இதனையடுத்து இலத்திரனியல் வாகனங்கள் பற்றி ஆராய நிதியமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது. விரைவில் அவர்களின் அறிக்கை கிடைக்கும். இதனால் பொதுப் போக்குவரத்து தொடர்பான வாகனங்களை இறக்குமதி செய்வதை மூன்றாம் காலாண்டில் தொடங்க முடியும்.

ஆனால் வழக்கம் போல வாகனங்களை வெவ்வேறு பாகங்களாகக் கொண்டு வர அனுமதி இல்லை. நாட்டின் தேவைக்கேற்ப நாட்டின் ஆற்றல் நுகர்வில் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.