இலங்கையில் காணி விலைகளில் ஏற்படும் மாற்றம்

இலங்கையில் காணி விலைகளில் ஏற்படும் மாற்றம்

இலங்கையில் காணி விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் உருமய (உரிமை) என்னும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 24 லட்சம் குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

காணி உரிமை இல்லாத பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் உறுதிப்பத்திரமுடைய காணிகளை கொள்வனவு செய்வதற்கான நாட்டம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் காணிகளுக்கான விலைகள் குறைவடையும் சாத்தியங்கள் உருவாகியுள்ளதாக வீட்டுமனை மற்றும் காணி தொடர்பான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் அதிகளவு காணிகளைக் கொண்ட ரயில்வே திணைக்களத்தின் காணிகளை குத்தகை அடிப்படையில் விவசாயம் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்காக வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மேலும் மஹாவலி மற்றும் வேறும் அமைச்சுக்களுக்கு சொந்தமான காணிகள் நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் சொத்து மதிப்பீடுகளின் அடிப்படையின் குத்தகை தொகை நிர்ணயம் செய்யப்படும் எனவு வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.