வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 40 ஆயிரம் இலங்கை தொழிலாளர்கள்

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 40 ஆயிரம் இலங்கை தொழிலாளர்கள்

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்ப்பவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய சுமார் 40 ஆயிரம் இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்காகக் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த பணியகத்தின் ஊடக பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள சுமார் 10 ஆயிரம் இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்நிலையிலேயே, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்ப்பவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.