காருக்குள் நீச்சல் தடாகம் ; ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்த பொலிஸார்

காருக்குள் நீச்சல் தடாகம் ; ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்த பொலிஸார்

இந்தியாவின் கேரளாவில் உள்ள ஆலப்புழாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர், முறையற்ற செயல் காரணமாக அவரது ஓட்டுநர் உரிமத்தை கேரள மாநில காவல்துறை ரத்து செய்துள்ளது.

இவர் கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமானவர் மற்றும் பிரபல சமூக வலைதளங்களால் பின்தொடரப்படுகிறார்.

நடிகர் பஹத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'ஆவேசம்' போன்று, குறித்த நபர் தனது காரில் சிறிய நீச்சல் குளம் அமைத்து, தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டே சாலையில் காரை ஓட்டி வந்துள்ளார். 

காருக்குள் நீச்சல் தடாகம் ; ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்த பொலிஸார் | Car Swimming Pool Police Canceled Driver S License

மேலும் கூறப்பட்ட காட்சிகளை யூடியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார். சாலையில் சென்று கொண்டிருந்த போது, ​​காரில் நிரம்பிய தண்ணீர் கசிந்து, காருக்குள் இருந்த தண்ணீர் முழுவதையும் சாலையில் விட்டனர்.

இதனால் குறித்த வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேரடி காட்சிகளை பார்த்த பலர் உடனடியாக ஆலப்புழா காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

காருக்குள் நீச்சல் தடாகம் ; ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்த பொலிஸார் | Car Swimming Pool Police Canceled Driver S License

இதையடுத்து, உடனடியாக அவரது காரை நிறுத்திய போலீஸார், அந்த காரை பறிமுதல் செய்து, போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அவர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.