இலங்கையில் பயங்கரம்; கணவரை கொன்ற மனைவி

இலங்கையில் பயங்கரம்; கணவரை கொன்ற மனைவி

மண்வெட்டியால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ள நிலையில் மனைவி கைதுசெய்யப்பட்டதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் இப்பலோகம, கன்திரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் பயங்கரம்; கணவரை கொன்ற மனைவி | Terror In Sri Lanka A Wife Who Killed Her Husband

கடந்த 6 ஆம் திகதி கணவன் தனது வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருக்கும் போது மனைவி மண்வெட்டியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

இந்நிலையில், இவர் கடந்த 24 ஆம் திகதி மீண்டும் கெக்கிராவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் மகளின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபரான 59 வயதுடைய மனைவியை கைது செய்த பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.