மதுபோதையில் இடம்பெற்ற பயங்கர விபத்து... இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

மதுபோதையில் இடம்பெற்ற பயங்கர விபத்து... இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

இந்தியாவில் சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் புனே கல்யாணி நகர் பகுதியில் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது

மதுபோதையில் இடம்பெற்ற பயங்கர விபத்து... இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழப்பு! | Pune Drunk Driving Accident Two Peoples Death

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண் உட்பட இருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த காரை செலுத்தியது 17 வயதான சிறுவன் என்பதும் அவர் மதுபோதையில் காரை செலுத்தியும் தெரியவந்துள்ளது.

மதுபோதையில் இடம்பெற்ற பயங்கர விபத்து... இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழப்பு! | Pune Drunk Driving Accident Two Peoples Death

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சிறுவனுக்கு அன்றைய தினமே நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.

வெறும் 14 மணித்தியாலத்திற்குள் சிறுவனுக்கு பிணை வழங்கப்பட்டது தொடர்பில் சிலர் எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.