யாழில் சகோதரியின் பெயரில் போலிக் கடவுச்சீட்டில் டென்மார்க் சென்ற பெண் கைது

யாழில் சகோதரியின் பெயரில் போலிக் கடவுச்சீட்டில் டென்மார்க் சென்ற பெண் கைது

டென்மார்க் பிரஜை ஒருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது டென்மார்க் பிராஜவுரிமை பெற்று அங்கு வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவரே நேற்று (19) இவ்வாறு கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பெண் கடந்த 2015 ஆம் ஆண்டளவில் தனது சகோதரியின் பெயரில் போலியான கடவுச்சீட்டை பெற்று டென்மார்க் நாட்டிற்கு சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வசித்த அவரது சகோதரி 2019ஆம் ஆண்டளவில் தனக்கு கடவுச்சீட்டு எடுப்பதற்காக விண்ணப்பித்த போது அவரது பெயரில் ஏற்கனவே கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அவருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படவில்லை.

யாழில் சகோதரியின் பெயரில் போலிக் கடவுச்சீட்டில் டென்மார்க் சென்ற பெண் கைது | Woman Traveled To Denmark With A Fake Passportஅதன்போதே அவருடைய சகோதரி தனது பெயரில் கடவுச்சீட்டு எடுத்து வெளிநாடு சென்ற விடயம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தனது தாயாரின் இறுதி கிரியைக்காக டென்மார்க்கில் இருந்து வந்தவர், போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி தனது சகோதரியின் பெயரில் யாழ்ப்பாணத்தில் வங்கிக் கணக்கொன்றினையும் ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பில் அறிந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சகோதரி யாழ்ப்பாண காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழில் சகோதரியின் பெயரில் போலிக் கடவுச்சீட்டில் டென்மார்க் சென்ற பெண் கைது | Woman Traveled To Denmark With A Fake Passportமுறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், டென்மார்க் பிரஜையான பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .