
என்னிடம் சொல்லுங்கள்! பொலிஸாரிடம் சொல்ல வேண்டாம் - மக்களிடம் கோட்டாபய விடுத்துள்ள கோரிக்கை
போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாராருக்கு வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த தகவல்களை நேரடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
குருநாகல் மாவட்ட மக்கள் முகம் கொடுத்துள்ள பாரிய பிரச்சினைகளில் ஒன்றாக போதைப்பொருள் பிரச்சினை காணப்படுகின்றது. இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியும் எந்த பலனும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் பொரிஸாரிடம் அந்த தகவல்களை வழங்காமல் தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.