வாகன இறக்குமதிக்கான அனுமதி! முதலில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்

வாகன இறக்குமதிக்கான அனுமதி! முதலில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்

வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்கும் போது முதலாவது பொது போக்குவரத்து வாகனங்களுக்கே அனுமதியளிப்போம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கையின் வாகன தேவைகளை நான்கு வகைகளாக பிரித்திருக்கின்றோம். முதலாவதாக பொது போக்குவரத்துக்கான வாகனங்கள், பேருந்து, லொறி போன்றவையைக் குறிக்கும். இரண்டாவது பொது தேவைக்காக மக்களினால் பயன்பபடுத்தப்படுகின்ற வாகனங்கள். உதாரணமாக மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி போன்றவற்றை குறிப்பிடலாம்.

மூன்றாவது வகையாக கார்களை குறிப்பிடலாம். அதாவது அதிலும் சிறிய கார்கள், பெரிய கார்கள் என வகைப்படுத்தலாகும்.

vehicle imports sri lanka

வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்கும் போது முதலாவது பொது போக்குவரத்து வாகனங்களுக்கே அனுமதியளிப்போம். இரண்டாவது மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு அனுமதி வழங்குவோம். மூன்றாவது தெரிவிலேயே கார்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் முன்னர் கூறியது போன்று கார் தெரிவு மூன்றாவது வகைப்படுத்தலிலேயே காணப்படுகின்றது. எனவே முதலில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும். பின்னர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பின்னர் தான் கார்களுக்கான அனுமதியை வழங்குவோம்.

விளையாடிக்கொண்டிருப்பதற்கான காலம் இதுவல்ல. எந்தவொரு செயற்பாட்டையும் முறையாக முன்னெடுக்க வேண்டும். அப்படிச் செய்யாததன் காரணமாகவே நாம் கடந்த காலங்களில் நெருக்கடியைச் சந்தித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.