கைப்பை சிக்கியதால் பரிதாபமாக பலியான பெண்
மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பை லொறியில் சிக்கிய விபத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். நிட்டம்புவ, வத்துபிட்டிவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று (19) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 54 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லொறியில் கைப்பை சிக்கியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் லொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்லதுடன் மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.