தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை இழுத்தடிக்கும் அரசாங்கம்: வெடித்த மாபெரும் போராட்டம்..!

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை இழுத்தடிக்கும் அரசாங்கம்: வெடித்த மாபெரும் போராட்டம்..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(19) இடம்பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு அரசாங்கம் கம்பனிகளிடம் கோரிக்கை விடுத்ததுடன் அமைச்சரவையிலும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை இழுத்தடிக்கும் அரசாங்கம்: வெடித்த மாபெரும் போராட்டம் | Upcountry Estate People Protest For Basic Salaryஎன்றாலும் கம்பனிகள் 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென தொடர்ச்சியாக கூறிவருவதுடன் அரசாங்கத்தின் தீர்மானத்தையும் ஏற்க மறுத்து வருகின்றன.

இது தொடர்பில் தொழில் அமைச்சு, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுகளும் தோல்வியிலேயே முடிந்தன.

இதன் காரணமாகவே கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கொழும்பில் குறித்த பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது.

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை இழுத்தடிக்கும் அரசாங்கம்: வெடித்த மாபெரும் போராட்டம் | Upcountry Estate People Protest For Basic Salaryஅத்தோடு பெருமளவான தொழிலாளர்களும் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணிக்காதீர், சம்பள விடயத்தில் இழுத்தடிப்பு வேண்டாம், அராஜக கம்பனிகளே தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை கொடு இல்லாவிட்டால் தோட்டங்களை விட்டு வெளியேறு போன்ற பல்வேறு சுலோகங்களை காட்சிப்படுத்தியவாறும் மற்றும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.