12 பெண்கள் உட்பட 671 பேர் கைது!

12 பெண்கள் உட்பட 671 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 12 பெண்கள் உட்பட 671 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

12 பெண்கள் உட்பட 671 பேர் கைது! | 671 People Including 12 Women Arrestedகைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 30 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 10 பேரை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 173 கிராம் ஹெரோயின், 117 கிராம் ஐஸ், 207 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.