100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இவ்வாறு பலத்த மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் | Heavy Rainfall Of More Than 100 Mm

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.