பேருந்து மோதி பெண் பலி

பேருந்து மோதி பெண் பலி

எத்துகல பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எத்துகல பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் எத்துகல பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கம்பளையிலிருந்து உலப்பனை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று எத்துகல பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த பெண் மீது மோதியுள்ளது.

பேருந்து மோதி பெண் பலி | Woman Dies After Being Hit By A Bus

சம்பவத்தில் பெண் படுகாயமடைந்துள்ள நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை எத்துகல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.