மடு மாதாவின் திருப்பயணம் ஆரம்பம்...! யாழ் மறைமாவட்ட பங்குகளில் இன்று முதல் தரிசிப்பு...!

மடு மாதாவின் திருப்பயணம் ஆரம்பம்...! யாழ் மறைமாவட்ட பங்குகளில் இன்று முதல் தரிசிப்பு...!

மடுமாதாவின் முடிசூட்டு விழாவின் நூற்றாண்டை முன்னிட்டு மடு மாதா திருச்சொரூபமானது இன்று(06) முதல் யாழிற்கு எடுத்துவரப்படவுள்ளது.

மடு மாதாவிற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு மாதாவின் திருச்சுரூபமானது யாழ் ஆயரின் வேண்டுகோளுக்கு அமைவாக யாழ் மறைமாவட்டத்தில் உள்ள பங்குகளுக்கு இன்று (06)முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வரை எடுத்து வரப்படவுள்ளது.

அந்தவகையில், மருதமடுத் திருத்தலத்திற்குச் சென்று வர முடியாத அன்னையின் பக்தர்களுக்குப் பெரும் ஆசீர்வாதமாக அமைவதுடன் மருதமடு அன்னையின் வருகையைத் தகுந்த ஆயத்தத்துடன் பக்தி பூர்வமாக அனுஷ்டிக்குமாறும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், யாழ் மறைமாவட்டத்திலுள்ள அனைத்து பங்குகளிலும் மடு அன்னையை தரிசிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.