தமிழர் பகுதியில் இளைஞர்களின் ஆபத்தான செயல்... வைத்தியசாலையில் ஒருவர் கவலைக்கிடம்!

தமிழர் பகுதியில் இளைஞர்களின் ஆபத்தான செயல்... வைத்தியசாலையில் ஒருவர் கவலைக்கிடம்!

மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (25-03-2024) காலை 10.30மணியளவில் வாழைச்சேனை - மீராவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் இளைஞர்களின் ஆபத்தான செயல்... வைத்தியசாலையில் ஒருவர் கவலைக்கிடம்! | Motorcycle Racing In Batticaloa 2 Youths Injuredவிபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஓட்டமாவடி - மீராவோடை ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இ.போ.ச சொந்தமான வாழைச்சேனை கிளை பேருந்து வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியால் மூன்று மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களே குறித்த விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியில் இளைஞர்களின் ஆபத்தான செயல்... வைத்தியசாலையில் ஒருவர் கவலைக்கிடம்! | Motorcycle Racing In Batticaloa 2 Youths Injuredஇதில், இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.