ஜிம்முக்கு வரும் பெண்களை மனைவியாக்கும் ஜிம் மாஸ்ரர்

ஜிம்முக்கு வரும் பெண்களை மனைவியாக்கும் ஜிம் மாஸ்ரர்

திருமணம் செய்து கொள்வதாக கூறி பல பெண்களை ஏமாற்றிய வழக்கில் மிஸ்டர் வேர்ல்டு பட்டம் பெற்ற மணிகண்டன் மீது சென்னை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மணிகண்டன் ஜிம்மிற்கு வரும் பெண்களையும், இன்ஸ்டாகிராமிலும் உடலமைப்பைக் காட்டி மயக்கி பெண்களிடம் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக சந்தியா குற்றம்சாட்டி இருந்தார்.

இதனையடுத்து, சிறையில் இருந்த தனது கணவர் மணிகண்டனை கவிதா ஜாமீனில் எடுத்தார்.

இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் தனது மனைவி கவிதாவுடன் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கொஞ்சம் நாள் அடங்கி இருந்தவர் மீண்டும் வேலைகளை ஆரம்பித்தார்.

 

ஜிம்முக்கு வரும் பெண்களை மனைவியாக்கும் ஜிம் மாஸ்ரர் | A Gym Masseur Who Marries Women Who Come To Gym

சமீபத்தில் மனைவி கவிதா யூடியூப்பில் கணவர் மணிகண்டன் கலந்து கொண்ட நிகழ்ச்சியை பார்த்த போது தனது மனைவி என வேறொரு பெண்ணை மணிகண்டன் காண்பித்ததால் கவிதா அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது தொடர்பாக கவிதா கணவர் மணிகண்டனிடம் கேட்டப்போது மிரட்டியதால் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மணிகண்டன் மீது கவிதா புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

ஆனால், கணவர் மணிகண்டன் புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கவிதா, கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கடிதம் எழுதிவிட்டு கடந்த மாதம் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே ஆபதத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா மணிகண்டன் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தன்னை விட்டு வேறொரு திருமணம் செய்து கொண்டு மோசடி செய்ததாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் பெண்களை ஏமாற்றிய புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த மணிகண்டன் மீது போலீசார் தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.