தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

தொடருந்துகளில்  இருக்கைகளை முன்பதிவு செய்வதில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி தொடருந்து இருக்கை முன்பதிவுகளை இரவு 7 மணி முதல் முன்பதிவு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  தீர்மானமானது நாளை (14.03.2024) முதல் தினமும் செயற்பாட்டில் இருக்கும் எனவும் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் காலை 10 மணிமுதல் தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளும் முறை நடைமுறையில் இருந்ததாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Important Notification Issued Railway Department