மரதன் ஓடிய மாணவன் மரணம் ; கல்வி திணைக்களத்தின் அறிவிப்பு

மரதன் ஓடிய மாணவன் மரணம் ; கல்வி திணைக்களத்தின் அறிவிப்பு

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டுப் போட்டி தொடர்பில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் இன்று அதிகாரிகளை அழைத்து விளக்கம் கோரவுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியுடன் இணைந்து நேற்றுக் காலை நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட குறித்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரதன் ஓடிய மாணவன் மரணம் ; கல்வி திணைக்களத்தின் அறிவிப்பு | Death Student Who Marathon Department Education

வைத்தியசாலை நிர்வாகத்தின் அலட்சியப்போக்கினால் குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாகக் கூறி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திருக்கோவில்-பொது பிரதான வீதியை மறித்து நேற்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோவில் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏராளமானோர் மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் வழியாக மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.

எனினும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.