இந்தியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 12 பேர் பலி

இந்தியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 12 பேர் பலி

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 12 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தானது நேற்று(28.02.2024) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தொடருந்து ஒன்றில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்த பயணிகளை மற்றொரு தண்டவாளத்தில் பயணித்த தொடருந்து மோதியபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் மீட்புப்பணிகளும் விசாரணைகளும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

இந்தியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 12 பேர் பலி | 12 Killed In Train Accident In India