ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் காலமானார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் காலமானார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தமிழகத்தின் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் காலமானார் | Shanthan Died Hospital Waiting To Come Sri Lanka

கோமாநிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் மரணம் அடைந்தார்.