வவுனியாவில் போதைப்பொருளுடன் பெண் கைது

வவுனியாவில் போதைப்பொருளுடன் பெண் கைது

வவுனியாவில் போதைப்பொருட்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா- மடுகந்தை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, மகாறம்பைக்குளம் பகுதியில் அவர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போதே  போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 25 வயது பெண் ஒருவரை அதிரடிபடையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 5 கிராம் கேரளா கஞ்சாவும் 2 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண், வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது