சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான காலம் அறிவிப்பு..!
கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை மே - ஜூன் மாதங்களில் நடத்துவதற்கும், உயர்தர பரீட்சைகளை டிசம்பரில் நடத்தவும் எதிர்பார்த்துள்ளோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
எனவே சாதாரண பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலவச பாடநூல்கள் சகல பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 12 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அதே போன்று சீருடைகளுக்கும் 6.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் சீருடை துணிகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பாடசாலை தவணைகள் மற்றும் பரீட்சைகளுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு இரு வாரங்களுக்குள் சுற்று நிரூபம் ஊடாக சகல பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்படும்.
கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை மே - ஜூன் மாதங்களில் நடத்துவதற்கும், உயர்தர பரீட்சைகளை டிசம்பரில் நடத்தவும் எதிர்பார்த்துள்ளோம். எனவே சாதாரண பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.