கந்தளாயில் குடும்பஸ்தர் எடுத்த திடீர் முடிவு!

கந்தளாயில் குடும்பஸ்தர் எடுத்த திடீர் முடிவு!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையொருவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய ஏ.றுமைஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், மனைவி இவரை விட்டுப் பிரிந்த நிலையில் மன நோய்க்குட்பட்டு இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.