
வெளிநாடுகளில் இருந்து மேலும் 55 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
வெளிநாடுகளில் இருந்து மேலும் 55 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டை வந்தடைந்தனர்.
தோஹாவிலிருந்து கட்டார் எயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூ.ஆர்- 668 என்ற விமானத்தின் ஊடாகவே இவர்கள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் வெளிநாட்டுக் கப்பல்களில் பணிபுரிந்த இலங்கையர்களும் உள்ளடங்குவதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த 55பேரிடமும் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன.