அனைத்து தகவல்களும் புலனாய்வு பிரிவினால் கண்டறியப்பட்டுள்ளன - இராணுவ தளபதி
ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் 19 தொற்று உறுதியானவர் சென்ற இடங்கள் தொடர்பில் அனைத்து தகவல்களும் புலனாய்வு பிரிவினால் கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்
இதற்கமைய அந்த இடங்களுக்கு சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னர் கொவிட் 19 தொற்று உறுதியானவர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நபரை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி சாரதி தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இவர் குறித்து உண்மையான தகவல்களை விசாரணை செய்து வருகின்றனர்.