மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீளவும் நாளையதினம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலைகளை காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு பாடசாலைகளை தயார்ப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்குவதற்கு சகல பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் ஜூலை மாதம் 28 ,29, 30, 31 ஆம் திகதிகள் பாடசாலையில் தங்கியிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப் பகுதியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்துரையாடி தேர்தல் நடவடிக்கைகளை பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை 2020 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் இணையத்தளத்தினூடாக மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள www.doenets.lk (onlineexams.gov.lk/onlineapps) என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

உரிய வழிமுறைகளை கவனமாகப் படித்து அதன்படி விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது