சகோதரியையும், காதலனையும் கொடூரமாக கொலை செய்த தம்பி! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதியொன்றில் திருமணம் மீறிய உறவு வைத்திருந்ததாக தனது அக்காவையும், காதனையும் தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் பகுதியைச் சேர்ந்த 28 வயதான மகன் சதீஷ்குமார் என்ற இளைஞன் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மகாலட்சுமிக்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் மகாலட்சுமி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் சதீஷ்குமார், மகாலட்சுமி இருவரும் அடிக்கடி கைபேசியில் பேசி தங்களது நட்பை வளர்த்து வந்துள்ளனர்.
இதனைத் தெரிந்து கொண்ட மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார் (20வயது) இருவரையும் அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.
இதனையடுத்து, நேற்று வழக்கம் போல இரவு வேலை முடித்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சதீஷ்குமார் வந்து கொண்டிருந்தார்.
வரும் வழியில், மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார், சதீஷ்குமாரின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
இதில் தலையை மட்டும் தனியாகத் துண்டித்து அந்த பகுதியில் உள்ள நாடக மேடையில் வைத்துள்ளார்.
மேலும் ஆத்திரம் தீராத பிரவீன்குமார் நேராக வீட்டிற்குச் சென்று, அங்கிருந்த அக்கா மகாலட்சுமி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரவீன்குமார் தாய் தடுத்துள்ளார். அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.