
சக்கரங்களை திருடிய பொலிஸ் உத்தியோகஸ்தர்: வெளியான சீ.சீ.டி.வி காணொளி
குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் இரண்டு சக்கரங்களை கொள்ளையிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருளை ஏற்றிச் சென்ற சம்பவம் தொடர்பாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தினால், கைப்பற்றப்பட்ட இந்த லொறி கடந்த ஒரு வருடமாக குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி அந்த லொறியின் இரண்டு சக்கரங்களை பொலிஸ் உத்தியோகஸ்தரும், மற்றுமொரு நபரும் இணைந்து கொள்ளையிட்டுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான காட்சிகள் அடங்கிய சீ.சீ.டி.வி காணொளிகளும் கிடைத்துள்ளன.
கொள்ளையிடப்பட்ட சக்கரங்கள் களனியில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விசேட பொலிஸ் குழு ஒன்று மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.