அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு

அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு தற்சமயம் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 

இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 7,000 மேற்பட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
 

இதன்காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 

ராமஜென்மபூமி வழக்கில் இந்திய உயர் நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பையடுத்து, அயோத்தியில் கடந்த 2020 ஆம் ஆண்டு, ஒகஸ்ட் 5 ஆம் திகதி நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
 

2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் 5 மண்டபங்களுடன் இந்த ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
 

இந்தநிலையில் கருவறையில் ராமர் சிலை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
 

நண்பகல் 12.20க்கு ஆரம்பமான பிரதிஷ்டை வைபவம் பிற்பகல் ஒரு மணியளவில் நிறைவடைய உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 

சிலை பிரதிஷ்டையைத் தொடர்ந்து, நாளை முதல் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
 

இன்றைய தினம் அயோத்தி ராமர் ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.