கொழும்பு பல்கலைக்கழகங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து?

கொழும்பு பல்கலைக்கழகங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து?

கொழும்பிலுள்ள பல்கலைக்கழகங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்புபிலுள்ள  பல்கலைக்கழகம் ஒன்றில் நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் இறுதி பரீட்சையின் பின்னர் ஹோலி பண்டிகையைக் கொண்டாடி யுள்ளனர்.

அதேபோன்று களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வி விஞ்ஞான பீடத்தில் விருந்து  நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவர்கள், அதனை கவனத்தில்கொள்ளாமல் செயற்படுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளினால் பல்கலைக்கழகங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினால்  கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும்  நாட்டு மக்கள் சுகாதார ஆலோசனைகளை மறந்து செயற்படும் நிலையை தற்போது காண கூடியதாக உள்ளதாகவும் அச்சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.