
கொரோனா நோயாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை - குவிக்கப்பட்டது இராணுவம்
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த கொரோனா நோயாளி தப்பியோடியதை அடுத்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் இடங்களில் இரணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
ஏற்கனவே பொலிஸார் பாதுகாப்பு கடமையில் உள்ள நிலையில் அவர்களுக்கு மேலதிகமாக ஆயுதமேந்திய இராணுவத்தினரும் கடமையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்ற வைத்தியசாலைகளுக்கான பாதுகாப்பே இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.