மீனகயா ரயில் சேவை ரத்து!

மீனகயா ரயில் சேவை ரத்து!

கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இன்று இரவு சேவையில் ஈடுபடவிருந்த 'மீனகயா' நகர் சேவை கடுகதி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வாழைச்சேனையில் ரயில் பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இதேவேளை, 'புலதிசி' விரைவு ரயில் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.