ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை : ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு..!

ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை : ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வருகைத் தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். 

கல்விப்  பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

2600இற்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. 

ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை : ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு | G C E A L Exam Sri Lanka 2023

இது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள அறிவிப்பில், 

பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்கள் அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக தமது பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும்.

பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்கு பரீட்சை நுழைவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.