பாலத்திற்கு அடியில் சிக்கிய இந்தியா விமானம் : மும்பையில் பரபரப்பு..!
மும்பை அருகே பழுதடைந்த விமானமான ஏர் இந்தியா A320 ஐ லொரியில் வைத்து எடுத்துச் சென்றபோது பாலத்தில் திடீரென சிக்கிக் கொண்டதை அடுத்து அங்கு போக்குவரத்து தடைப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
மும்பையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பழைய ஏர் இந்தியா விமானத்தை லொரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்தின் அடியில் திடீரென விமானம் சிக்கிக் கொண்டது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சில மணி நேரம் போராட்டத்திற்கு பின் லொரி மீட்கப்பட்டதாகவும் லொரி சாரதியிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஏர் இந்தியா A320 2021 இல் சேவையில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து சமீபத்தில் ஒரு தொழிலதிபரால் ஏலத்தில் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.