இலங்கை வரவிருக்கும் நடிகர் விஜய்
படப்பிடிப்பிற்காக தளபதி விஜய் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெங்கட் பிரபு இயக்கும் இந்த புதிய படத்திற்கு தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் யோகி பாபு, பிரஷான், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, சினேகா, லைலா ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், புத்தாண்டு காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த படத்தின் அடுத்த படப்பிடிப்பு இலங்கையில் ஜனவரி மாத இரண்டாம் வாரத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை, 'தளபதி 68' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பெயர் புத்தாண்டு தினத்தன்று வெளியிடப்படப்படவுள்ளது.