கேப்டன் விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர் விஜய்!
நடிகர் விஜயகாந்த் உடல்நிலைகுறைவால் இன்றைய தினம் மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி கேட்டு திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்திற்கு பல பிரபலங்கள் இன்று காலை முதலே தங்கள் இரங்கல்களை தெரிவித்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், செந்தூர பாண்டி மூலம் தனக்கு மிகப்பெரும் வளர்ச்சிக்கு அடித்தளம் போட்ட விஜயகாந்தின் பூத உடலை நேரில் சென்று பார்த்து விஜய் கதறியழுந்துள்ளார்.