மின்சாரதூணில் கட்டிவைத்து தாயை மோசமாக தாக்கிய மகனின் செயலால் அதிர்ச்சி.
தோட்டத்தில் விளைந்த கோவாவை பறித்த தாயை படுமோசமாக தாக்கி அவரை மின்சார தூணொன்றில் மகன் கட்டிவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஒடிசா மாநிலம் கியாஜ்ஹர் மாவட்டம் சரசபசி கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது மகனான சஸ்துருகனின் தோட்டத்தில் விளைந்த கோவாவை தாயான சாரதா சமையலுக்காக பறித்துள்ளார்.
இதனை அறிந்து ஆத்திரமடைந்த மகன் தனது தாயார் சாரதாவை கடுமையாக தாக்கி அருகே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார்.
அத்துடன் மாமியாரை காப்பாற்றச் சென்ற மனைவியையும் சஸ்துருகன் தாக்கியுள்ளார். எவராவது தடுத்தால் அவர்களையும் தாக்குவேன் என்று ஊர் மக்களையும் மிரட்டியுள்ளார்.
இறுதியில் சஸ்துருகனிடமிருந்து அவரது தாயார் மற்றும் மனைவியை ஊர் மக்கள் மீட்டனர். மகன் தாக்கியதில் படுகாயமடைந்த சாரதா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.