உங்கள் துணையை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்... இது தெரிஞ்சா லைப் சூப்பரா இருக்கும்
பொதுவாகவே நமது சந்தோஷமும் துக்கமும் நம்மை சூழ இருப்பவர்களை சார்ந்து தான் இருக்கின்றது என கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா? இதற்கு உளவியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.
உதாரணமாக நீங்கள் தொழில் புரியும் இடத்தில் பல பேர் இருப்பார்கள் அவர்களுள் ஒருவர் ஒரு சினிமா பாடலை முனுமுனுத்தாராயின் சிறிது நேரத்தில் அந்த பாடலை உங்களை அறியாமலேயே நீங்கள் முனுமுனுத்துக் கொண்டிருப்பீர்கள்.
இதற்கு காரணம் ஆற்றல்கள் எளிதில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கடத்தப்படக் கூடியது.இது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை.காரணம் தெரியாவிட்டால் கூட ஆற்றல்கள் கடத்தப்படுகின்றது.
இதற்கு சிறந்த உதாரணம் நீங்கள் இருக்கும் இடத்தில் குறிப்பிட்ட 10 பேர் சத்தம் போட்டு சிரிக்கின்றார்களாயின் உங்களுக்கு காரணம் தெரியாமலேயே நீங்களும் சிரிப்பீர்கள் இந்த சந்தர்ப்பத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு முறையாவது அனுபவித்திருக்க கூடும்.
இது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய விடயம் கிடையாது. அது தொடர்பில் சரியான விழிப்புணர்வு அவசியம். இதில் என்ன இருக்கின்றது என்று தானே யோசிக்கின்றீர்கள்? ஆம் இது சாதாரண விடயம் கிடையாது நாம் யாருடன் உறவு வைத்திருக்கின்றோமோ நமது மனநிலை அவர்களின் எண்ணங்களில் தங்கியிருக்கின்றது.
பொதுவாகவே ஒருவர் எந்த நேரமும் மகிழ்ச்சியாக இருக்கின்றார் என்றால் அவருடன் நீங்கள் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தால் உங்களை அறியாமலேயே உங்களுக்குள் அந்த மகிழ்ச்சி கடத்தப்பட்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை போன்று உணர்வீர்கள்.
தினமும் மன அழுத்தத்துடனும் கோபமாகவும் இருக்கும் ஒரு நபருடன் உங்கள் நாளை செலவழிக்க வேண்டி ஏற்பட்டால் நாளின் முடிவில் உங்களுக்குள்ளும் அவரின் எதிர்மறை எண்ணங்கள் தொற்றிக்கொள்ளும்.இதனை நாம் பல நேரங்களில் கவனத்தில் கொள்வதில்லை.
இருப்பினும் இதுவே உண்மை சிலரின் குணம் மிகவும் நகைச்சுவையானதாக இருக்கும் ஆனால் மனைவியிடம் மட்டும் சிடுசிடுவென இருப்பார். மனைவியிடம் பேச ஆரம்பித்த உடனேயே கோபமடைந்து விடுகின்றார் என்றால் மனைவியிடம் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து காணப்படுகின்றது என அர்த்தம்.
இதுவே எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் ஒரு பெண் கணவனிடம் பேசும் போது மட்டும் கவலையாகி விடுகின்றாள் என்றால் கணவன் எப்போதும் எதிர்மறையாக சிந்திப்பதனால் தான். இது கணவன் மனைவிக்கு மட்டும் அல்ல நம் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.
நாம் யாருடன் பழகுகின்றோம்? அவர்களுடன் பழகும் போது நமக்கு என்ன மாதிரியான மனநிலை உருவாகின்றது என்பதில் எப்போதும் கவனமாக இருங்கள். இதுவே உங்களின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைகின்றது.
முடிந்தவரை நல்ல எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள் இது உங்களை சூழ நல்ல எண்ணங்கள் உள்ள மனிதர்களை ஈர்க்க உதவும்.
இந்த அறிவியல் உண்மையை புரிந்துக்கொண்டு நேர்மறை ஆற்றல்களை வளர்த்துக்கொள்வதும் நாம் யாருடன் உறவு வைத்துக்கொள்கின்றோம் என்பதில் கவனம் செலுத்துவதும் உங்கள் வாழ்வை உயர்த்தும்.