செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் விளைந்துள்ள மற்றுமொரு ஆபத்து!
உலகை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், இது மனிதனது வாழ்வில் முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருத்தாலும் பாதகத்தை ஏற்படுத்த தவறவில்லை என்பது நிதர்சனம்.
அண்மையில் பிரபலமாகி வரும் டீப்ஃபேக் (Deep Fake) தொழில்நுட்பம் நன்மை என்றாலும் மக்கள் மத்தியில் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டீப்ஃபேக் (Deep Fake) தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி குரலினை க்ளோனிங் செய்து ஒருவரது குரலை 85 சதவீதம் ஒத்ததாக ஒளிப்பதிவுகளை இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ள முடியும்.
இந்த தொழிநுட்பத்தினால் பலர் பாதிக்கப்பட்ட செய்திகளும் வெளியாகி மக்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, ஏற்கனவே இருக்கும் ஒரு குரலை அடிப்படையாக வைத்து அதேபோன்ற போலியான குரலில் எதை வேண்டுமானாலும் பேச வைக்கலாம் என்பதே பாதுகாப்பு நிபுணர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்மையில் அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் குழந்தை கடத்தப்பட்டதாக ஒரு நபருக்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்து, அந்த குழந்தையின் குரலைப் போலவே தொழில்நுட்பத்தை உருவாக்கி பேசவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த அச்சுறுத்தல்களில் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,.
அதே நேரம் இந்த செயற்கை நுண்ணறிவு இன்னும் எத்தனை பாதகங்களை ஏற்படுத்தப்போகின்றதோ என்ற அச்சமும் அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.