பாடசாலை நேரத்தில் போதைப்பொருள் பாவித்த இரு ஆசிரியர்கள் கைது!

பாடசாலை நேரத்தில் போதைப்பொருள் பாவித்த இரு ஆசிரியர்கள் கைது!

வெளிமடை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் சேவை நேரத்தில் இரண்டு ஆசிரியர்கள் கஞ்சா போதைப்பொருள் பாவித்ததாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிமடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிமடை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பாடசாலையின் சங்கீத அறையை சோதனைக்கு உட்படுத்திய போது கஞ்சா பாவனையில் ஈடுபட்டிருந்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆசிரியர்களிடம் இருந்து 1.9 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிமடை காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இந்த சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் (10) வெளிமடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.