நடந்துசென்ற பெண்ணை மோதிய பேருந்து.

நடந்துசென்ற பெண்ணை மோதிய பேருந்து.

பேருந்து ஒன்று வீதியோரம் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் பொலிஸ் பிரிவில் புத்தளத்திலிருந்து குருணாகல் நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு பெண்ணை மோதியுள்ளது.

நடந்துசென்ற பெண்ணை மோதிய பேருந்து | A Bus Hit A Walking Womanவிபத்தில் படுகாயமடைந்த பெண் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் புத்தளம் வீதியில் வசிக்கும் 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.