தென்னிலங்கையில் தமிழ் இளைஞர் படுகொலை: வெளியான காரணம்..!

தென்னிலங்கையில் தமிழ் இளைஞர் படுகொலை: வெளியான காரணம்..!

கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் இன்று (28.10.2023) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலன்னாவை பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 27 வயதுடைய சந்திரகுமார் விஜயகாந்த் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த மூவர் அடங்கிய குழுவினர், வீட்டிலிருந்த அந்த இளைஞரை வெளியே அழைத்து கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

கழுத்தில் பாரிய வெட்டுக்காயங்களுக்குள்ளான அந்த இளைஞரை அவரின் குடும்பத்தினர் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

காதல் விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையாளிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.