
தாய் வெளிநாட்டில் - 8 வயதுச் சிறுமிக்கு கசிப்பு பருக்கிய நபர் கைது
ஹல்தும்முல்ல- நீட்வூட் தோட்டத்தில் சிறுமியொருவருக்கு பலவந்தமாக கசிப்பு பருக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி ஹல்தும்முல்ல மாவட்ட வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹல்தும்முல்ல- நீட்வூட் தோட்டத்தைச் சேர்ந்த இந்தப் பிள்ளையின் தாய் வெளிநாட்டில் வசிப்பதுடன், தந்தை போதைக்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பிள்ளையின் மாமா உறவு முறையான ஒருவரைக் கைதுசெய்வதற்காக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.